May 24, 2025 22:30:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை”

தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தான் எந்த வகையிலும் அச்சுறுத்தவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமான விடயம் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நீதிபதி நாட்டை விட்டு வெளியியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்பது சந்தேகமளிப்பதாகவும் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.