January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலையில் கசிப்பு விற்ற 9ஆம் வகுப்பு மாணவன்!

இலங்கையின் கலவான பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவனொருவர் கசிப்பு விற்று ஆசிரியர்களிடம் சிக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

9ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தனது தண்ணீர் போத்தலில் கசிப்பை கொண்டு சென்று மேல் வகுப்பு மாணவர்களுக்கு விற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணீர் போத்தலின் மூடியில் அதனை ஊற்றி மேல் வகுப்பு மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் அறிந்த ஆசிரியர்கள் மாணவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.