November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடுமையாகும் காலநிலை: நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல்!

Raining Common Image

இலங்கையின் பல பாகங்களிலும் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.