
File Photo
மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
25ஆம் திகதி இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவில் 2.4ஆக பதிவாகியுள்ளதாகவும் புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
எனினும், இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மற்றும் இலங்கையை அண்மித்த பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகளவில் நில அதிர்வுகள் பதிவாகும் நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.