
இலங்கையில் 2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்களில் 6 வயது சிறுமி உள்ளிட்ட 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் அதிகமானவை மேல் மற்றும் தென்மாகாணங்களிலேயே இடம்பெற்றுள்ளன.
கொழும்பு மாளிகந்த நீதிமன்றத்திற்கு அருகில் தனது தாய் மற்றும் தந்தையுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே குறித்த 6 வயது சிறுமி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.