May 6, 2025 23:18:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண்ணை சுற்றிவளைத்து தாக்கிய பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது!

கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள பிரபல நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி கிளையொன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து ஊழியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பல்பொருள் அங்காடிக்கு சில காரணங்களுக்காக, அங்கிருந்த ஊழியர்களால் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

இந்த சம்பவத்தில் பெண் ஊழியர்களும் இணைந்தே அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தியதுடன், குறித்த பெண்ணின் மேலடையும் இதன்போது அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன.

இதனை தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவம் தொடர்பில் அந்த பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய ஐந்து பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.