
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்ல முன்னர் இவ்வாறு அறிவத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலகவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.