2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதிகளை மறுசீரமைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
புதிய திகதி விபரங்கள் குறித்து அடுத்த வாரத்தில் பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பார் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நவம்பரில் நடத்தப்படவிருந்த பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதால், பரீட்சை திகதிகளில் மாற்றம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை தவணை விடுமுறை நாட்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.