
அஸ்வெசும பயனாளர்களில் மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
709.5 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். .
அதன்படி, 1,162,245 பயனாளி குடும்பங்களுக்கு ஜூலை மாதத்துக்காக இதுவரை 7,278 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான ஆராய்வு நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அந்த குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.