November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தல் அல்ல!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கே திட்டமிடப்படுவதாகவே கூறப்படுகின்றது.

இதன்படி அடுத்த வருடம் ஜுன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இதனால் எவ்வேளையிலும் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிட முடியும்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என்பதனால் அதற்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடலாம் என்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடையவுள்ள போதும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஒரு வருடத்திற்கு முன்னரே அதனை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.