2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
செப்டம்பர் 14ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக அனுப்பி வைக்க முடியும் என மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
www.ugc.ac.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும், அதற்காக ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 உயர்தரப் பரீட்சையில் 263,933 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.