க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் வகுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள கல்வி அமைச்சுக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சாதாரண தரப் பரீட்சையை 10ஆம் தரத்திலும் உயர் தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, ஆரம்பத்திலேயே ஒரு போட்டித் தன்மையை ஏற்படுத்துவதாகவும் இந்தப் போட்டியால் சிறுவர்களிடையே வெறுப்பும், கோபமும் எழுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும் போட்டி நிலவுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், போட்டித் தன்மையைக் கொண்ட கல்வி முறை இருக்கும் வரை, நாட்டிற்காக ஒரு தன்னலமற்ற சமூகத்தை உருவாக்குவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.