February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில் சேவைகள் பல இரத்து – ரயில் கூரையில் பயணித்த இளைஞன் கீழே விழுந்து பலி! 

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரயில் சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 11ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் உள்ளிட்ட சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதனால் சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிய ரயில்கள் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வேலைநிறுத்தக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபட்ட ரயிலொன்றின் கூரை மீது பயணித்த 20 வயது இளைஞன் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலில் சன நெரிசலாக இருந்தமையினால் அந்த இளைஞன் ரயிலின் கூரையில் பயணித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.