November 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா அறிக்கையை மீண்டும் நிராகரிக்கும் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

பேரவையின் ஆரம்ப அமர்வில் இலங்கை சார்பாக உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களை நிராகரிப்பதுடன், இவற்றுக்கு ஒத்துழைப்பை வழங்காது என்றும் சுபாஷினி அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களைஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில்வாக்களிப்பதை தவிர்த்தன என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்தவிரும்புகின்றோம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், பல்தரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்ற நாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில்கொண்டும். இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும் பேணும் என்று ஹிமாலி சுபாஷினி அருணதிலக தெரிவித்துள்ளார்.