2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல்-4 ஊடகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு பின்னால் பிரதான சூத்திரதாரியொருவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் ஓய்வுபெற்று செல்லும் போது வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.