February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனில் இருந்து கொழும்பு வந்த தமிழ் யுவதி மாடியிலிருந்து விழுந்து மரணம்!

File Photo

பிரிட்டனில் இருந்து கொழும்பு வந்திருந்த 27 வயது தமிழ் யுவதியொருவர் கல்கிசை பகுதியில் மாடி குடியிருப்பொன்றில் 13 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

சின்னையா அழகேஸ்வரன் ரோமீனா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரஜையான இந்த யுவதி, பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தையில் வசிக்கும் இளைஞன் ஒருவரை காதலித்துள்ளதாகவும், இவரை சந்திப்பதற்காக அவர் இலங்கை வந்து கொழும்பில் தங்கிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்திருந்த யுவதி, இன்றைய தினம் மீண்டும் பிரிட்டன் செல்லவிருந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார், யுவதியின் காதலன் என்று கூறப்படும் இளைஞனை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.