February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் ஜனாதிபதி பதவியை கேட்கும் மைத்திரி!

தனக்கு ஜனாதிபதி பதவியை வழங்கினால் அரசாங்கத்திற்கு செல்ல தயார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்திற்கு நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”நான் அரசாங்கத்திற்கு செல்லத் தயார். ஆனால் ஜனாதிபதி பதவி கிடைக்க வேண்டும். பிரதமர் பதவியோ, அமைச்சுப் பதவியோ அவசியமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.