January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளிட்ட 73 பேரும் எதிராக ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் உள்ளிட்ட 113 பேரும் வாக்களித்தனர்.

அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.