நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.