
2019 ஏப்ரல் 21 தாக்குதலுடன் தமது குடும்பத்தினரை தொடர்புபடுத்தி செனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டு ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளதாகவும் அசாத் மௌலான என்பவர் ‘செனல் 4’ ஊடாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
2005 இலிருந்து ராஜபக்ஷர்களுக்கு எதிராக இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, குறித்த ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்யானது என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.