நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள். அதை விடுத்து, தான் பிறந்த தேசிய இன சமூகத்தை தானே இழிவு படுத்தும் வார்த்தை பிரயோகம் வேண்டாம் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படத்தின் டிரெய்லர் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த டிரெய்லரின் ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனம் பயன்படுத்தப்படும் நிலையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
”இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட இழிவு வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட காணொளியில் பயன்படுத்த வேண்டாம்.
அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து பகிரங்கமாக காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.
நானே ஒரு கதாசிரியர். எனக்கு இதுபற்றி தெரியும். அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று போடுங்கள். சரியாக வரும்”