
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னை பதவி விலக்கியமை தொடர்பான கடிதம் தனக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிய செயலாளர் பதவிக்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.