November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள்!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் திங்கட்கிழமை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித் தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி பாஷானி முனசிங்க முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன், வர்த்தகப் பிரிவில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச்சேர்ந்த கவிதினி தில்சரணி தருஷிகா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி மாணவி டபிள்யூ.ஏ.எம். சச்சினி சத்சரணியே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை பொறியியல் தொழிநுட்ப பிரிவில் காலி ரிச்மண்ட்கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்பிரிய முதலிடம் பெற்றுள்ளார்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணபிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த பரீட்சையில் 263,933 பேர் உயர்தரப் பரீட்சைக் குத் தோற்றியிருந்ததுடன், 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.