November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செனல்-4 தகவல்கள் குறித்து ஆராய பாராளுமன்றக் குழு!

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 தயாரித்துள்ள ஆவணப்படம் தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமானால் அது பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வீடியோவில் உண்மைகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.