
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 வெளியிடவுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சில தகவல்களை செனல் 4 வெளியிட திட்டமிட்டள்ளது.
இது தொடர்பான முன்னோட்ட காட்சிகளை செனல் 4 வெளியிட்டுள்ளது. அதில் ஆசாத் மௌலானா சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் முழுமையான ஆவணப்பட வீடியோ பிரித்தானிய நேரப்படி செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.