
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்கினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறங்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
”ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாச போட்டியிடப் போவதில்லை என்பதனை அடித்துக் கூறுகின்றேன். இம்முறை தேர்தலில் சஜித் தரப்பினர் டலஸ் அழகப்பெரும அல்லது மைத்திரிபால சிறிசேன அல்லது அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரில் ஒருவரை தள்ளிவிட்டு தப்பித்துக்கொள்வர்” என்று பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.