File Photo
முன்னாள் ஜனாதிபதி கோடடாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக அவரை களமிறக்க குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்த அவர், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் அமெரிக்க குடியுரிமையை பெற முயன்ற போதும், இதுவரையில் அந்தக் குடியுரிமை கிடைக்கவில்லை.
இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருக்கும் அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவருவதற்காக சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.