February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை நேரத்தில் மாற்றமா?: கல்வி அமைச்சிடம் யோசனை!

விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் விளையாட்டுகளுக்காக நேரத்தை ஒதுக்கும் வகையில் இவ்வாறான யோசனையை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.