May 28, 2025 19:25:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

29 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களுடன் பெண்ணொருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இரத்தினக்கற்களை கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சென்னை நோக்கி பயணிக்கவே இவர் விமான நிலையம் வந்திருந்ததாகவும், இவர் தனது ஆடைகளில் 2311.75 கிராம் எடையுடைய இரத்தினக்கற்களை மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இவரிடம் இருந்து மீட்கப்பட்ட இரத்த்தினக் கற்களின் பெறுமதி 29 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகளின் மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.