May 4, 2025 12:10:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையகக் குயில் அஷானி போட்டியாளராக தெரிவானார்!

மலையக சிறுமி அஷானி தமிழகத்தின் ‘சீ தமிழ்’ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ (Saregamapa Lil Champs) நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்வாங்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக அவர் நிகழ்ச்சியில் பாடி வந்தாலும், போட்டிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது சீ தமிழ் வெளியிட்டுள்ள எதிர்வரும் சனிக்கிழமைக்கான நிகழ்ச்சி முன்னோட்ட காட்சியில் அவர் உத்தியோகபூர்வமாக போட்டிக்குள் உள்வாங்கப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்படுவதை காண முடிகின்றது.

அந்த முன்னோட்ட காட்சியில் இலங்கை பாராளுமன்றத்தில் அஷானி தொடர்பாக எம்.பியொருவர் உரையாற்றும் காட்சியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புசல்லாவை நயாபன தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் அஷானி, பாடசாலையில் பாடிய பாடல் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதன் மூலமே குறித்த தொலைகாட்சியின் சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.