சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களுடன் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்கள் கடந்த காலங்களில் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் வவுனியா நகரில் சுமார் 2383 நாட்களை கடந்து சுழற்றி முறையில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போராட்டங்களில் காணாமல் செய்யப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
August 30, international day of the victims of enforced disappearances.
The Protest of those searching for the enforced Disappearances begins from the Mannar Sathosa Mass grave site pic.twitter.com/U2gR40NcWv— Jera Thampi (@JeraThampi) August 30, 2023