அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை சமர்ப்பித்திருந்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் கீழ் 689,803 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்களுக்காக வங்கிக் கணக்குகளில் சுமார் 4,395 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் போலியான தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும கொடுப்பனவுகளை பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு அஸ்வெசும நலன்புரி சட்டத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தற்போது ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு மிக விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.