இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஏப்ரல் தொடக்கம் ஜுன் வரையான இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த திட்டத்தின் புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் 39 வீத அதிகரிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பதிவான 181 எச்.ஐ.வி தொற்றாளர்களில் 15-24 வயதுக்கு இடைப்பட்ட 26 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 13 எயிட்ஸ் நோயாளர்கள் இறந்துள்ளதாகவும் இதன்படி இந்த வருடத்தில் 28 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.