November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிக உஷ்ணம்: சிறுவர்கள் தொடர்பில் மருத்துவர்கள் விசேட ஆலோசனை!

இலங்கையில் அதிக உஷ்ணமான காலநிலை தொடரும் நிலையில், இந்த காலப்பகுதியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக நீரை பருகக் கொடுக்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த காலப்பகுதியில் குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும், அதேபோன்று அதிக உடல் வெப்பநிலை காணப்படலாம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று சிறுவர்களுக்கு தோல் நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் இதனால் சிறுவர்களை காலையிலும் மாலையிலும் குறைந்தது 20 நிமிடங்களுக்காவது நீராட்ட வேண்டும் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.