அடுத்த வாரத்தில் கொழும்பை விட்டு தூர இடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லக் கூடாது என்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.