இலங்கையில் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகார சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுநாயக்க, இரத்தமலானை, மத்தளை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விமான சட்டங்களுக்கு அமைய விமான நிலையம் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்திற்குள் 300 மிட்டர் அல்லது அதற்கு மேல் உயரத்திற்கு பட்டம் விடுவதற்கோ, டிரோனை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டம் விடுவதற்காக பயன்படுத்தப்படும் நூல் விமானங்களுக்கு விபத்தை ஏற்படுத்தலாம் என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் இது தொடர்பில் ஒலிபெருக்கிகள் மூலம் மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.