Photo: SocialMedia
சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கை வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு மற்றும் கடல் சார் ஆய்வு நிறுவனமான ‘நாரா’ ஆகியன விடுத்த கோரிக்கையை ஏற்ற பாதுகாப்பு அமைச்சு கப்பல் வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் அதிருப்பதிக்கு மத்தியிலேயே இலங்கை குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
‘ஷி யான் 6’ ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
‘நாரா’ எனப்படும் இலங்கையின் நீர்வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கப்பல் இலங்கை வருவது தொடர்பில் இந்தியா உண்ணிப்பாக அவதானித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் இலங்கைக்குள் வருவது இது முதற்தடவையல்ல. கடந்த வருடம் ஏப்ரல் 20 ஆம் திகதியும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், அதன்போது அந்த கப்பலில் இருந்தவர்கள் 10 நாட்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.