ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்களின் போது, தாம் கவனிக்கப்படாதவர்களாகவே இருப்பதாக தெரிவித்தே இவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சி குழு கூட்டத்தின் போது குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்குள் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது தாம் தீர்மானம் எடுக்க நேரிடும் என்றும், சிலவேளை அது அதனை எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானமாகவும் இருக்கலாம் என்றும் பின்வரிசை எம்.பிக்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சமன்பிரிய ஹேரத், திஸ்ஸ குட்டியாராச்சி, ஜயந்த கட்டகொட, மிலன் ஜயதிலக்க, டி.வீரசிங்க போன்ற எம்.பி.க்கள் இது தொடர்பில் பிரதமரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையே கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யவதாக பிரதமர், அவர்களிடம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.