File Photo
‘அஸ்வெசும’ திட்டத்தின் முதற்கட்ட கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விசேட தேவையுடையவர்கள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 5.4 பில்லியன் ரூபாவும், விசேட தேவையுடையவர்கள், முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் 1.8 பில்லியன் ரூபாவும், சமுர்த்தி கொடுப்பனவு கிடைத்து அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமல் மேன்முறையீடு செய்துள்ளவர்களுக்கு 1.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலான ஒன்றாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.