January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கஜேந்திரகுமாரின் வீட்டுக்கு பாதுகாப்பை வழங்குமாறு சபையில் கோரிக்கை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றிவளைக்கவுள்ளதாக குழுவொன்று அறிவித்துள்ளதாகவும், இது பாரதூரமான அச்சுறுத்தல் என்றும் சுட்டிக்காட்டியுள்ள டிலான் பெரேரா, சுற்றிவளைக்க செல்லும் அந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் எவருக்கும் சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது என்றும், இதனால் அரசாங்கம் உடனடியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.