இலங்கையின் ‘சுப்ரீம் சட்’ விண்கலத்திற்கான 320 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கு என்ன நடந்தது என்ற தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சந்திரனில் காலடி வைப்பதற்காக இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்ட 3 சந்திராயன் திட்டங்களுக்கும் மொத்தமாக 263 மில்லியன் அமெரிக்க டொலர்களே செலவாகியுள்ள நிலையில், இலங்கையினால் 2012 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டாக கூறப்படும் ‘சுப்ரீம்சட்’ விண்கலத்துக்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையினால் சந்தினுக்கோ விண்ணுக்கோ போக முடியவில்லை என்றும், கடைசியில் பாதாளத்திற்கே போக நேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ள அவர், சுப்ரீட்சட் விண்கலத்திற்கான 320 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கும் என்ன நடந்தது என்பதனை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.