February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்திரயான் 3: இந்தியாவை வாழ்த்தும் இலங்கை ஜனாதிபதி!

சந்திரனில் காலடி வைத்த இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிற்கும் (இஸ்ரோ) இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மனித சமூகத்திற்காக இந்திய பிரதமர் மோடி ஆற்றிய இந்த அர்ப்பணிப்பு, எதிர்கால சந்ததியினரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.