மலையக பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபாட்டனர்.
வடிவேல் சுரேஷ், இராதாகிருஷ்ணன், உதய குமார், வேலுகுமார், கோவிந்தம் கருணாகரம், சிறீதரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் மலையக மக்களுக்கு காணி, வீட்டு உரிமைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சபைக்கு நடுவே வந்து இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதுடன், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை மாத்தளை தோட்டமொன்றில் தொழிலாளர் குடும்பங்கள் மீதான தோட்ட நிருவாகத்தின் செயற்பாடுகளை கண்டிப்பதாகவும், இதனுடன் தொடர்புடைய அதிகாரி கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.