April 17, 2025 12:47:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தன் திருவிழா ஆரம்பம் – (Live Video)

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காலை 10 மணியளவில் கோடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரையில் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

ஆகஸட் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

இதேவேளை திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.