இலங்கை முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மக்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய காலநிலையில் சூழல் வெப்பமடையும் போது ஏற்கனவே மன அழுத்தத்தால் இருப்பவர்கள் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளகளாம் என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மருந்து உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடலில் நீரின் அளவு குறையுமிடத்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வெப்பமான காலநிலை நிலவும் காலப்பகுதியில் சிறுவர்களையும் பாதுகாத்துக் கொள்ள, அவர்களுக்கு முடிந்தளவு நீரை பருகக் கொடுக்குமாறு வைத்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.