மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க திட்டமிடப்படுகிறது.
கட்சியின் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் இன்னுமொரு குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை விமர்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க ஆராய்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் விரைவில் கட்சி செயலாளரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.