பாராளுமன்றத்திருள்ள குழு அறையொன்றில் இருந்து மெத்தையொன்றும் தலையணைகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற பிரதானியொருவர் அங்குள்ள குழு அறைகளை பார்வையிட்ட போது, குறித்த குழு அறையில் தலையணைகளும், மெத்தையும் இருந்துள்ளதாக ‘லங்காதீப’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இந்த தலையணைகள், மெத்தை என்பன எதற்காக இங்கே கொண்டு வரப்பட்டன என்று குறித்த பிரதானி விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடும் பெண் ஊழியர்கள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் தவறான வகையில் நடந்துகொள்ள முயன்றதாக தெரிவித்து முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.