
முடிந்தால் தனக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்து காட்டுமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
துள்ளினால் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன் என்றும், இதனை கூறுவதற்கு தான் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கிற்கு சென்று அங்கு விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கைவைப்பவர்களின் தலைகளுடேயே களனிக்கு திரும்பி வருவேன் என்று தான் கூறிய கருத்துக்கு எதிராக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி மேர்வின் சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நாடு எங்களுடையது. தமிழர்களுடையது அல்ல. சோழர்கள் மற்றும் எல்லாளனுடன் ஆக்கிரமித்து வந்தவர்கள் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னரும், கொல்லப்பட்ட பின்னரும் இங்கே ஒளிந்து இருந்துவர்களே தமிழர்களாக இருக்கின்றனர் என்று அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.
தான் வெளியிடும் கருத்துக்களுக்கு எதிராக முடிந்தால் வழக்குகளை தொடருமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுவதாகவும், எதற்கும் தான் அஞ்சப் போவதில்லை என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.