அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் புதிய நிர்மாணப்பணிகளும் உள்ளடக்கப்படாது என்று தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அரச நிறுவனங்களுக்கான புதிய தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாகங்கள் கொள்வனவு செய்யப்படுவது இயலுமானவரை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.