November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்வெசும தவணைக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்?

File Photo

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதல் தவணைக் கொடுப்பனவு ஆகஸ்ட் 16 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்திக்கப்பட்டுள்ள 15 இலட்சம் குடும்பங்களுக்கான மாதாந்த தவணை கொடுப்பனவு வழங்கப்படவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இவ்வாறு வழங்கப்படவுள்ள தவணைக் கொடுப்பனவிற்கான நிதியை நிதி அமைச்சின் ஊடாக அரச வங்கிகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும தொடர்பில் 217,000 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், 8 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அஸ்வெசும திட்டம் குறைபாடுகளை கொண்டது என்றும், இதனை நிறுத்துமாறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.